அருவிக்கரை ஊராட்சி கோழிவிளையில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இதில் இட வசதி இல்லாததால் புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. கட்டிடம் கட்ட அரசு ரூ 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. கட்டுமான பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (ஜூலை 31) அடிக்கல் நாட்டினால் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அருவிக்கரை ஊராட்சியின் முன்னாள் தலைவர்கள் சலேத் கிறிஸ்டோபர், ஜான் கிறிஸ்டோபர், திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஷ் குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.













