திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளாங்கோடு – பாரத பள்ளி இணைப்புச் சாலை செப்பனிடும் பணிகளை நேற்று முன்தினம் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் கலெக்டர் அழகு மீனா ஆகியோர் திருவட்டாரில் தொடங்கிவைத்தனர். இந்தச் சாலையின் நடுவில் மூன்று மின்கம்பங்கள் உள்ளன.
அந்த மின்கம்பங்களை அகற்றிய பிறகுதான் சாலையைச் செப்பனிடும் பணிகள் துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவட்டார் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரூராட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.













