மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் அருண் (27). இவரது தந்தை, தாய், சகோதரன் 20 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்தனர். இவர் தனது பெரியப்பா விஜயன் என்பவரது பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கார் டிரைவராக வேலை செய்து வந்தார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள அறையில் அருண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.














