சென்னை – சாலிமர் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

0
120

பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் – மேற்கு வங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் தேவை அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து. இயக்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – மேற்குவங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் – சாலிமர் இடையே புதன்கிழமைகளில் புறப்படும் சிறப்பு ரயில் (02842) சேவை, ஜூலை 16 முதல் 30-ம் வரை காலகட்டத்தில் 3 சேவைகள் இயக்கப்பட உள்ளன. சாலிமர் – சென்னை சென்ட்ரல் இடையே திங்கள்கிழமைகளில் புறப்படும் சிறப்பு ரயில் (02841) சேவையும் நீட்டிக்கப்படுகிறது. ஜூலை 14 முதல் ஜூலை 28-ம் தேதி வரை 3 சேவைகள் இயக்கப்பட உள்ளன.

இதுபோல, விழுப்புரம் – ராமேசுவரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06109-06110) 6 சேவைகள் (ஜூலை 12 முதல் ஜூலை 27-ம் தேதி வரை) நீட்டிக்கப்படுகிறது. சிறப்பு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here