பேச்சிப்பாறையில் நேற்று முன்தினம் இரவு ஒரு யானை மோதிரமலை அருகே பழங்குடியின குடியிருப்புகள் புகுந்து மகேந்திரன் காணி என்ற தொழிலாளியின் குடிசை வீட்டை பிரித்தது. உடனடியாக மகேந்திரன் காணி மற்றும் மனைவி பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி அப்போது கூச்சல் போடவே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து யானையை துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு யானை அங்கிருந்து சென்றது. இதில் குடிசை வீடு சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக மகேந்திரன் காணி உட்பட அந்த பகுதி மக்கள் நேற்று (ஜூலை 1) களியல் வனச்சரக அலுவலகத்தில் புகார் அளித்தனர்.