அருமனை பகுதி சேர்ந்த சஜி-ஆஷிகா தம்பதிக்கு 4 வயது மகன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். சம்பவ தினம் மாணவனை பள்ளி ஆசிரியர் அடித்து, கை கால்களில் வீக்கம் ஏற்பட்டு, காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. அருமனை போலீசார் விசாரணை நடத்தாமல் இரு தரப்பும் பேசி சமரசம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் இந்த செயல் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக வேதனையுடன் கூறினர்.














