குலசேகரம்: தொழிலாளியை கொல்ல முயற்சி.. 7 ஆண்டு சிறை

0
238

குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (64). தையல் தொழிலாளியான இவருக்கும் அக்கத்து வீட்டைச் சேர்ந்த கோபன் என்ற பாபுவுக்கும் சொத்துப் பிரச்சனை இருந்தது. கடந்த 2-1-2013 ஆம் ஆண்டு ஜெயக்குமார் கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது கோபன் அரிவாளால் அவரை வெட்டிக் கொலை முயற்சி செய்தார். வழக்கு பத்மநாபபுரம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி மாரியப்பன் நேற்று வழங்கிய தீர்ப்பில் அத்துமீறி நுழைந்ததற்கு 2 ஆண்டு, கொலை முயற்சிக்கு 7 ஆண்டுகள் தண்டனையும், அபராதம் விதித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here