மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிறந்தநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர், தலைவர்கள் வாழ்த்து

0
661

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது 48-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துவதுடன், மகிழ்ச்சியாக இருந்து நாட்டுக்கு மேலும் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி: அரசில் சக ஊழியராக இருக்கும் எல்.முருகன், தனது அர்ப்பணிப்பான பணிகள் மூலம் அரசுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார். அவரது உழைப்பு, லட்சக் கணக்கான மக்களின் வாழ்வை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்று வருகிறது.

அவர் இதேபோல் உற்சாகத்துடன் நாட்டை முன்னேற்றிச் சென்று, மென்மேலும் உயரத்தை அடைய வேண்டும். அவரது வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி உள்ளிட்டவற்றை இறைவன் வழங்க பிரார்த்தித்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல், குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, கிரண் ரிஜுஜு உல்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்கள், சுப்ரியா சூலே உள்ளிட்ட எம்.பி.,க்கள், ஆர்.என்.ரவி உள்ளிட்ட ஆளுநர்கள், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சி.சரஸ்வதி எம்எல்ஏ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் சமூக வலைதள பக்கத்தில் நன்றி கூறியுள்ள எல்.முருகன், நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக உறுதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here