கிள்ளியூர், நீரோடி மிக்கேல் காலனியை சேர்ந்தவர் லிசி (49). இவரது மகளை கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான பொழியூர் என்ற இடத்தை சேர்ந்த அனில் குமார் (39) என்பவர் திருமணம் செய்து உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு லிசியின் மகள் கடந்த சில ஆண்டுகளாக தாய் வீட்டில் வந்து தங்கி உள்ளார்.
இந்த நிலையில் சம்பவ தினம் இரவு லிசியின் வீட்டிற்கு வந்த அனில் குமார் மனைவியிடம் பிரச்சனை செய்துள்ளார். இதை தட்டி கேட்ட மாமியாரை பிடித்து அனில் குமார் தள்ளினார். இதில் கீழே விழுந்த லிசியின் கை முறிந்தது. இதையடுத்து அவர் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து அனில்குமாரை கைது செய்தனர்.