களியக்காவிளை அருகே பாறசாலை ஸ்ரீ மகாதேவர் கோயில் சித்திரை திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (மே.11) மாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் 7 யானைகள் பங்கேற்ற பூரம் விழா நடந்தது. இரவு 10 மணிக்கு பாறசாலை சந்திப்பில் குடைமாற்றல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (மே.12) அதிகாலை 1 மணிக்கு சுவாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளினார். மாலை 6 மணிக்கு சுவாமிக்கு திருவாராட்டு நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு திருக்கொடி இறக்குதல் நடைபெறும். இரவு 9 மணிக்கு மேல் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் திருவிழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.