மார்த்தாண்டம் – கருங்கல் சாலையில் விரிகோடு பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக அடிக்கடி ரயில் செல்வதால் இந்த கேட் மூடப்படுவது வழக்கம். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. இதற்காக அரசு ஒப்புதல் அளித்தது. அதிகாரிகள் மாற்றுப்பாதையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் விரிகோடு ரயில்வே கேட்டு அமைந்துள்ள பகுதி வழியாக மேம்பாலம் அமைக்காமல் மாற்றுப்பாதையில் அமைக்க நில அளவீடு பணியை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வந்திருந்தனர்.
இதை அறிந்த பொதுமக்கள் மற்றும் விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் மக்களோடு சேர்ந்து நில அளவு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து நில அளவீடு பணி நிறுத்தப்பட்டது.