கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பராசக்தி கார்டனை சேர்ந்தவர் ஸ்ரீலிஜா இவர் 11-வது வார்டு கவுன்சிலராகவும், அ. தி. மு. க. வடக்கு மண்டல செயலாளராகவும் உள்ளார். ஸ்ரீலிஜா வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், ‘எனது நற்பெயருக்கு தீங்குவிளைவிக்கும் வகையில் ஈஸ்வரி அம்மாள், பாண்டியன் மற்றும் கீதா ஆகியோர் பொது இடங்களில் பேசியும், சுவரொட்டி மூலமும் அவதூறு பரப்பினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.














