குருசுமலை: புனித வெள்ளி நிகழ்ச்சியில் எம்பி பங்கேற்பு

0
138

கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு, 40 நாட்களாக விரதம் இருந்து ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனால் புனித வெள்ளி என்று அழைக்கப்படுவதுடன், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டம் குருசுமலையில் புனித வெள்ளி என்பது இயேசுவின் சிலுவைச் சாவை நினைவுகூறும் ஒரு கிறிஸ்தவ நிகழ்வாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும். இயேசுவின் சிலுவைச் சாவைக் குறிக்கும் விதமாக, குருசுமலை ஆசிரமத்தில் உள்ள சிலுவையின் 14 நிலையங்கள் மற்றும் மலையேற்றம் போன்ற ஆன்மீக நிகழ்வுகள் நடைபெறும். இன்று நடைபெற்ற புனித வெள்ளி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்த நிகழ்வை நினைவுகூறும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டார். இந்த நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், தேவிகோடு மணிகண்டன், மகிளா காங்கிரஸ் அம்பிளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here