குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைக்கு பக்தர்கள் மஞ்சள் பொடி மற்றும் பால் ஊற்றி வழிபாடு செய்வது வழக்கம்.இந்தநிலையில் நாகராஜா கோவிலில் வடசேரி திலகவதியார் உழவாரப்பணி குழு மற்றும் தூத்துக்குடி திருதாண்டக வேந்தர் குழுவினர் இணைந்து கோவிலின் உள் சுற்று பிரகாரத்தில் உள்ள செடி, கொடி மற்றும் மணல் திட்டுகளை சரிசெய்து உழவாரப்பணி மேற்கொண்டனர். இந்த பணியினை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மராமத்து பொறியாளர் ராஜ்குமார், கோவில் கணக்கர் சிதம்பரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Latest article
புத்தேரியில் 4 வழிச்சாலையில் 1 டன் இரும்பு கம்பிகள் திருட்டு
நாகர்கோவில் புத்தேரி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார்...
இரணியல்: ரவுடி கொலை: அண்ணன் போலீசில் சரண்
இரணியல் அருகே கண்டன் விளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜகோபால் (54) சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில், அவரது அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணன் (63) மனைவியிடம் ராஜன் தவறாக...
திற்பரப்பு: அருவியில் நேற்று பிற்பகல் முதல்பயணிகளுக்கு அனுமதி
குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு 10 நாட்களாக குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று விடுமுறை நாளானதால் ஏராளமானோர் குவிந்தனர். நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால்...














