கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப் பள்ளியில் இன்று காலை மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் பி. கோபால் தலைமை வகித்தார். கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஏஞ்சலின் பிரைட், ஜோஸ்பின், லதா ராணி, மேரி ரீட்டா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அரசு பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று அரசின் நலத்திட்டங்களான காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், இலவச பாடபுத்தகம் மற்றும் பட்டதாரிகளுக்காக ஆயிரம் ரூபாய் அரசு வழங்குவது மற்றும் இந்த பட்ஜெட்டில் அறிவித்த இலவச மடிக்கணினி உள்பட்ட அரசின் சலுகைகளை மாணவர்களின் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறி தங்களுடைய பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்குமாறு வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.














