கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீனாட்சி கார்டன் பகுதியில் நேற்று அதிகாலையில் 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து, கையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் அங்கும் இங்கமாக நோட்டமிட்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து கோட்டார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.