நித்திரவிளை:   கடல் மணல் திருட்டு டெம்போவுடன் 2 பேர் கைது

0
309

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியில் மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக நள்ளிரவில் நித்திரவிளை போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து இரவு ரோந்து அதிகாரி அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்றனர். அங்கு திருட்டுத்தனமாக மணல் அள்ளி வைத்திருந்த டெம்போவை கைப்பற்றினர்.

தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சந்தோஷ்குமார் (35), ஜெபர்சன் (33) ஆகியோரை கைது செய்து நித்திரவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமான புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் சந்தோஷ்குமார், ஜெபர்சன் மற்றும் வாகன உரிமையாளர் அனீஸ் விமல் மற்றும் மணல் அள்ளும் தொழிலில் ஈடுபட்ட நித்திரவிளை பகுதியை சேர்ந்த தாமஸ், சாத்தான்கோடு பகுதி சேர்ந்த அருள், ஆலங்கோடு பகுதியை சேர்ந்த ஷாஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here