கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் ஒழுகினசேரி பகுதியில் நேற்று ரோந்து சுற்றி வந்தார். அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த அழகுத்துரை (42) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.