மார்த்தாண்டம்: பஸ் நிலையத்தில் 3 பேரிடம் திருட்டு

0
183

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் இலவுவிளை பகுதியைச் சேர்ந்த சுதா (28) என்பவர் 2 வயது குழந்தையுடன் பஸ் நிலையம் வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற ஒரு பெண் குழந்தையின் கையில் கிடந்த தங்க வளையலைத் திருடியுள்ளார். குழந்தை கத்தியதுடன் அந்தப் பெண் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மீண்டும் அதே பஸ் நிலையத்தில் பஸ் ஏற வந்திருந்த ஒரு பெண் கத்திக் கூச்சலிட்டார். அப்போது யூனிஃபார்மில் வந்த 3 பெண்கள் அந்தப் பெண்ணின் பையில் இருந்து ரூபாய் 10 ஆயிரம், அவரது பர்ஸ், ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு போன்றவற்றை மாயமாக்கினர் என்பது தெரிந்தது. 

இதை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த அதே நேரம் பேருந்து நிலையத்தின் மற்றொரு பகுதியில் அந்தத் திருட்டுப் பெண்களுடன் வந்த மர்ம ஆசாமி ஒருவர் பார்வைக் குறைபாடு உள்ள ஒரு முதியவரை பஸ்ஸில் ஏற்றுவது போல் நடித்து, அவர் கையில் அணிந்திருந்த மோதிரத்தைப் பறித்துள்ளார். பயணிகள் அந்த நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். திருட்டுப் பெண்களுடன் வந்து வசமாக மாட்டிக்கொண்ட ஆசாமியை மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here