தக்கலை அருகே உள்ள இரணியல் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதன் அருகே பார் அமைந்துள்ள பகுதியில் பழக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 10 மணி வரை அந்த கடையில் வியாபாரம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு கடை மூடப்பட்டது.
இன்று 24-ம் தேதி காலை கடையை திறக்க ஊழியர் வந்துள்ளார். அப்போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த அவர் கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்திருப்பது தெரிய வந்தது. அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடையிலிருந்து ரூ 10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 3 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் உள்ளிட்டவைஎடுத்து சென்றுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.