நித்திரவிளை: பட்டப் பகலில் வீடு புகுந்து 20 பவுன் நகை கொள்ளை

0
278

நித்திரவிளை அருகே பூந்தோப்பு காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் (45) வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி கிமி (35) மற்றும் பிள்ளைகள் ஊரில் உள்ளனர். நேற்று காலை 9 மணி அளவில் வீட்டைப் பூட்டிவிட்டு அருகே உள்ள தேவாலயத்திற்குச் சென்றார். திரும்பி 11 மணியளவில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, அறையில் உள்ள பீரோ உடைத்து அதிலிருந்து 20 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. பட்டப்பகலில் வீட்டில் புகுந்து திருடியது தெரிய வந்தது. சம்பவம் குறித்து நித்திரவிளை போலீசுக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கைரேகை பதிவு செய்தனர். மார்த்தாண்ட டிஎஸ்பி நல்லசிவன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here