கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலச்சூரங்குடியைச் சேர்ந்தவர் விஜய்(26). இவர் அவரது நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது முன்விரோதம் காரணமாக ரமேஷ் மற்றும் இரண்டு பேர் அங்கு வந்து அவரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த விஜய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசாரிப்பள்ளம் போலீசார் இது தொடர்பாக நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.