நாகர்கோவிலில் லாட்டரி, மது விற்ற 2 பேர் கைது

0
155

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று கனகமூலம் சந்தை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கேரள லாட்டரி விற்றதாக திலகர் தெருவை சேர்ந்த கோபகுமார் (வயது 51) என்பவரை கைது செய்து 7 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல கோட்டார் போலீசார் வட்டவிளை பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (42) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here