மண்டைக்காடு: போராட்டத்திற்கு குவிந்த இந்து முன்னணியினர்

0
261

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உட்பகுதியில் உள்ள கடைகள் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளதாகவும், அதனை மாற்றி அமைக்க கேட்டும், திருவிழாக்காலங்களில் உள்ளூர் மக்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரியும், திருவிழாவின்போது கடைகளில் தமிழ் மலையாளத்தில் விலைப்பட்டியல் வைக்கவும், திருவிழாவில் இயக்கப்படும் சிறப்பு பஸ் டிக்கெட் கட்டணங்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியானது. 

இதை அடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் இன்று 23-ம் தேதி பகவதி அம்மன் கோயில் அருகே திரண்டனர். இதன் காரணமாக மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு போலீசார் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் பங்கேற்க இந்து முன்னணி நிர்வாகிகளும் அங்கு வந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை அடுத்து கோவிலின் உட்பகுதியில் கிழக்கில் இருந்த கடைகள் தெற்கு பகுதிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகள் இடம் பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மதியம் போராட்டம் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here