அருமனை: ஒப்பந்ததாரர்கள் மோதல்.. 8 பேர் மீது வழக்கு

0
226

அருமனை அருகே இடைக்கோடு பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இந்த பேரூராட்சியின் தலைவியாக உமாதேவி என்பவர் இருந்து வருகிறார். பேரூராட்சியில் தற்போது பணிகளை டெண்டர் எடுக்க 47 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இந்த 47 ஒப்பந்ததாரர்களுக்கும் சம அளவில் பணிகளை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே ஒப்பந்தங்களை எடுத்த ஒப்பந்ததாரர்களின் மனைவிகளின் பெயரில் மீண்டும் தங்களுக்கு பணி ஒப்பந்தம் தர வேண்டும் என கூறி ஒரு தரப்பினர் பிரச்சனை ஏற்படுத்தினர். 

இதனால் டெண்டர் கிடைக்காத ஒப்பந்ததாரர்களுக்கும் ஏற்கனவே டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சில கவுன்சிலர்களும் சில ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு அலுவலகத்தில் இருந்த மேஜை உடைக்கப்பட்டு கோப்புகள் சேதப்படுத்தப்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து பேரூராட்சித் தலைவி பள்ளிக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பேரூராட்சி அலுவலகத்தில் சேதப்படுத்தியதாக ஒப்பந்ததாரர்கள் வினோ, கிறிஸ்துராஜ், விஜயகுமார் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here