மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டிகள் திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கத்தில் நடந்தது. குமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் கருங்கல் புனித அல்போன்சா கல்லூரி ஆங்கிலத்துறை முதலாம் ஆண்டு மாணவன் ஷரோன் ஜஸ்டஸ் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம், வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி அர்ச்சனா தடி ஊன்றி தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கமும், வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவி அகிலா 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவி ஆஷிகா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், தீபக், அர்ச்சனா, ஆஷிகா, சந்தியா ஆகியோர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.
இதுபோன்று கணினி அறிவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி தீபிகா மும்முறை தாண்டல் போட்டியில் வெண்கலப் பதக்கமும், எம்எஸ்சி முதலாம் ஆண்டு மாணவி சந்தியா ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பிரிவில் நான்காவது இடத்தை பெற்று கல்லூரி பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற வீரர்களை உடற்கல்வி இயக்குனர் மற்றும் கல்லூரி மேலாளர், தக்கலை மறை மாவட்ட குழுவின் முதல்வர் பேரருட் பணியாளர் தாமஸ் பவ்வத்து பரம்பில் வெற்றிக் கோப்பை, பதக்கங்களை வழங்கி வாழ்த்த














