ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோக்கும் ‘டாக்சிக்’ படக்குழு!

0
192

உலகளவில் ‘டாக்சிக்’ படத்தை வெளியிட, ஹாலிவுட் நிறுவனத்துடன் அப்படக்குழு பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இதன் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனை டிசம்பர் மாதம் வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

இதனிடையே, இப்படத்தை உலகளவில் வெளியிட யஷ் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான 20th செஞ்சுரி ஃபாக்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர்களிடம் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை அளிக்க முடிவு செய்திருக்கிறார். முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவுற்றதைத் தொடர்ந்து, விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘டாக்சிக்’. ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோக்க இருப்பதால், ஹாலிவுட் படத்தின் தரத்துக்கு ஏற்றவகையில் இருக்க படப்பிடிப்பு நடத்தி வருகிறது படக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here