மார்த்தாண்டம் அருகே உள்ள நெட்டியான் விளையில் கர்த்தர் அதிசயங்களை செய்கிறார் என்ற தேவாலயம் உள்ளது. இந்த ஆலயம் சார்பில் ஆலய வளாகத்தில் வாக்குத்தத்த ஆசீர்வாத கூட்டம் என்ற தலைப்பில் நற்செய்தி கூட்டம் இன்று 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் கர்த்தர் அதிசயங்களை செய்கிறார் ஆலய நிறுவனர் பாஸ்டர் கே.என். ராஜன் வாக்குத்தத்த செய்திகளை வழங்குகிறார். பாடல் குழுவினர்கள் பாடல்களை பாடுகிறார்கள். இந்த கூட்டத்தில் சபை பாகுபாடு இன்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஆலய நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயம் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.














