குலசேகரம்: பெண் விஷம் குடித்து தற்கொலை

0
248

குலசேகரம் அருகே உள்ள மணபோடை பகுதியை சேர்ந்தவர் குமார் மனைவி துளசி (43). இவர்களுக்கு இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகளுக்கு திருமணம் ஆகிய நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குமாருக்கு  மதுப்பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கடந்த சில நாட்களாக துளசி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

       இந்த நிலையில் நேற்று முன்தினம் துளசி விஷம் குடித்து வீட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியா கணவர் குமார் உறவினர்கள் உதவியுடன் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று (25-ம் தேதி) அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here