தலக்குளம் பி. எஸ் நியூரோ சென்டரில் உள்ள பி. எஸ் நர்சிங் கல்லூரியில் “போலீஸ் அக்கா” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பி. எஸ் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இரணியல் சப். இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் கலந்து கொண்டு நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகளிடம் “போலீஸ் அக்கா” திட்டம் குறித்து பேசினார்.
மாணவ மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அச்சம் இல்லாமல் தங்கள் கல்லூரிக்கு எனறு தரப்படும் தொலை பேசி எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும். குமரி மாவட்ட எஸ். பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில் இந்த கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இரணியல் காவல் நிலைய தலைமை பெண் காவலர் புஸ்பஜினி போலீஸ் அக்காவிடம் 9498197358 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் அமுது மற்றும் துணை முதல்வர், ஆசிரியர்கள், ஊளியர்கள், மாணவ மாணவியர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.














