தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு

0
256

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரத சாஹூ சமீபத்தில் மாற்றப்பட்டார். அவருக்கு பதில், தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து, அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்வு செய்து அறிவித்தது. சத்யபிரத சாஹூ, கால்நடை பராமரிப்பு , மீன்வளம், பால்வளத்துறை செயலராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நேற்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். 2002-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக், ஒடிசாவை சேர்ந்தவர் என்பதுடன், தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here