குழித்துறை:   ரயில்வே கேட் கீப்பரை தாக்கி சிக்னல் உடைப்பு

0
453

நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரயில்வே பாதையில் குழித்துறை ரயில் நிலையம் உள்ளது. இதில் குரும்பத்தூர் என்ற இடத்தில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு நேற்று திருத்துவபுரத்தை சேர்ந்த பிளசன் (36) என்பவர் கேட் கீப்பராக பணியாற்றினார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மூன்று பேர் கும்பல் பிளசனை திடீரென தாக்கி, கேட் கீப்பர் அறையில் இருந்த பொருட்களை உடைத்து, தொடர்ந்து ரயில்வே பாதையில் இருந்த சிக்னலையும் உடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார், களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த பிளசன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த தாக்குதலுக்கான காரணம் நேற்று முன்தினம் இரண்டு பேர் பைக்கில் வந்துள்ளனர். அப்போது இன்டர்சிட்டி ரயில் செல்வதற்காக கேட்டு பூட்டப்பட்டிருந்தது. அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிய வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here