80-வது சுதந்திர தினம் நாளை கொண்டாட்டம்: கோட்டையில் முதல்முறையாக கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்

0
46

​நாட்​டின் 80-வது சுதந்​திர தினத்​தை​யொட்​டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்​தளத்​தில் முதல்​வர் விஜய் நாளை முதல்​முறை​யாக தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்து உரை​யாற்​றுகி​றார். தகை​சால் தமி​ழர், அப்துல் கலாம், கல்​பனா சாவ்லா உட்பட பல்​வேறு விருதுகளை​யும் வழங்​கு​கி​றார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் ஆட்​சி​யமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய், முதல்​வ​ராக கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றார்.

இந்​நிலை​யில், நாட்​டின் 80-வது சுதந்திர தினம் நாளை (ஆக.15) கொண்​டாடப்​படு​கிறது. தலைநகர் டெல்​லி​யில் பிரதமர் மோடி தேசி​யக் கொடியை ஏற்​றி வைக்​கி​றார்.

அதே​போல, தமி​ழ​கத்​தின் தலைநகர் சென்​னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்​தளத்​தில் முதல்​வர் விஜய் தேசி​யக் கொடியை முதல்​முறை​யாக ஏற்​றி​வைத்து உரை​யாற்​று​வதுடன், பல்​வேறு விருதுகளை​யும் வழங்​கு​கி​றார்.

முன்​ன​தாக, காலை 8.30 மணிக்கு கோட்டை கொத்​தளம் பகு​திக்கு வரும் முதல்​வர் விஜய்யை தலை​மைச் செயலர் சாய்​கு​மார் வரவேற்​று, காவல் துறை அதி​காரி​களை அறி​முகம் செய்து வைப்​பார்.

பிறகு, காவல் துறை​யின் பல்​வேறு பிரி​வினர் அளிக்​கும் அணிவகுப்பு மரி​யாதையைப் பார்​வை​யிடும் முதல்​வர், 8.45 மணிக்கு கோட்டை கொத்​தளத்​தில் தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்து மரி​யாதை செலுத்​துகி​றார்.

தொடர்ந்து நடை​பெறும் விழா​வில், தகை​சால் தமி​ழர் விருது, அப்​துல் கலாம் விருது, துணிவு மற்​றும் சாகசத்​துக்​கான கல்​பனா சாவ்லா விருது, முதல்​வரின் நல்​ஆளுமை விருது, மாற்​றுத் திற​னாளி​களுக்கு சிறப்​பாக பணி​யாற்​றிய மருத்​து​வர், நிறு​வனம், சமூக சேவகர், கூட்​டுறவு வங்​கிக்​கான விருதுகள், சமூகநல சேவைக்கான விருது, சிறந்த மாநக​ராட்​சிகள், நகராட்​சிகள், பேரூ​ராட்​சிகள் ஆகிய​வற்​றுக்​கான விருதுகளை​யும் முதல்​வர் வழங்​கு​கி​றார்.

நீதிப​தி​கள், அமைச்சர்​கள், முக்​கிய விருந்​தினர்​கள் நிகழ்ச்​சி​யைக் காண, கோட்டை கொத்​தளம் எதிரே 3 மேடைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

5 அடுக்கு பாது​காப்பு

விழா நடை​பெறும் ஜார்ஜ் கோட்​டையைச் சுற்றி 5 அடுக்கு பாது​காப்பு வளை​யம் அமைக்​கப்​படு​கிறது. சென்னை விமான நிலை​யத்​துக்கு 5 அடுக்கு பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

சென்ட்​ரல், எழும்​பூர் உள்​ளிட்ட அனைத்து ரயில், மெட்ரோ ரயில் நிலை​யங்​கள், வணிக வளாகங்​கள், கடற்​கரைப் பகு​தி​கள், வழி​பாட்​டுத் தலங்​களி​லும் பாது​காப்பு ஏற்​பாடு​கள் பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

மாநிலம் முழு​வதும் முக்​கிய இடங்​களில் தீவிர சோதனை மற்​றும் கண்​காணிப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. ​விடு​தி​கள், ஓட்​டல்​களில் போலீ​ஸார் சோதனை நடத்தி வரு​கின்​ற​னர்.

சென்னை பெருநகர​காவல் எல்லை முழு​வதும் நான்கு சக்கர மற்​றும் இருசக்கர ரோந்து வாக​னங்​கள் மூலம் போலீ​ஸார் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். முக்​கிய சாலை​களில் தடுப்​பு​கள் அமைத்​து, வாக​னத் தணிக்​கை​யும் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

சந்​தேகத்​துக்​குரிய நபர்​கள், ஆதர​வின்​றி நிற்​கும் வாக​னங்​கள் குறித்து தகவல் கிடைத்​தால் உடனே போலீ​ஸாருக்கு தெரிவிக்​கு​மாறு பொது​மக்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் சுமார் 10 ஆயிரம் போலீ​ஸார் உட்பட தமி​ழ​கம் முழு​வதும் ஒரு லட்​சம் போலீ​ஸார் பாது​காப்​பு, கண்​காணிப்பு பணி​யில் ஈடு​படு​கின்​ற​னர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here