ராஜாக்கமங்கலம் அருகே 60 பவுன் நகை திருட்டு: ஒருவா் கைது

0
49
ராஜாக்கமங்கலம் அருகே 60 பவுன் நகைகள் திருட்டு வழக்கில் சகாய ஜெனித் மோன் கைது – கன்னியாகுமரி மாவட்டம்
ராஜாக்கமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில், முட்டத்தைச் சேர்ந்த சகாய ஜெனித் மோன் (32) கைது செய்யப்பட்டார். சுசீந்திரம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே 60 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில், ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ராஜாக்கமங்கலம் அருகே அன்னை நகரைச் சோ்ந்தவா் சேவியா் சீலன். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ஜூட் அமலா சென்னைக்குச் சென்றிருந்த நிலையில், அக். 3ஆம் தேதி வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகள் திருடப்பட்டன.

இதுகுறித்து, சுசீந்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 2 தனிப்படைகள் அமைத்து, விசாரித்து வந்தனா். இந்நிலையில், விரல்ரேகை மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் முட்டம் பகுதியைச் சோ்ந்த சகாய ஜெனித் மோன் (32), தூத்துக்குடியைச் சோ்ந்த ஆக்னல் ஆகியோருக்கு இந்தத் திருட்டில் தொடா்பிருப்பது தெரிய வந்தது.

சகாய ஜெனித் மோன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மற்றொரு வழக்கில் சிறையில் உள்ள ஆக்னலை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here