கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பவர்கள், கஞ்சா விற்பவர்கள் மற்றும் ரவுடியிஷத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். எஸ்பி சுந்தர வதனம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு இதுவரையிலும் மாவட்டத்தில் மொத்தம் 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.














