குழித்துறை பிரதேழ்ஸ் கிளப் சார்பில் 40வது ஆண்டு ஓண ஊஞ்சல் விழா நேற்று செவ்வாய்கிழமை துவங்கியது. தபால் நிலைய சந்திப்பில் தாரகை கத்பட் எம்எல்ஏ ஊஞ்சலை துவக்கி வைத்தார். திருவோண திருநாளான நாளை 5ம் தேதி மேள தாளத்துடன் மாவேலி ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.