தண்ணீரின்றி கருகிய 3,000 ஏக்கர் சம்பா பயிர்கள்: மன்னார்குடியில் வயலில் இறங்கி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

0
17

மன்​னார்​குடி அருகே பாமணி ஆற்​றில் தண்​ணீர் வராததால் கருகி வரும் சம்பா பயிர்​களை கண்டு வேதனையடைந்த விவசாய குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​கள், வயலில் இறங்கி ஒப்​பாரி வைத்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி அருகே எளவனூர் பகுதி​யில் பாமணி ஆற்​றுப் பாசனத்தை நம்பி 5,000 ஏக்​கரில் சம்பா சாகுபடி செய்​யப்​பட்​டுள்​ளது. இதில், தண்​ணீரின்றி 3,000 ஏக்​கர் பரப்​பிலான நெற்​பயிர்​கள் கருகத் தொடங்​கி​யுள்​ளன. இத​னால், அப்​பகுதி விவசாயிகள் வேதனை அடைந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், கரு​கிவரும் பயிர்​களைக் கண்டு வேதனை அடைந்த விவசாய குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​கள், நேற்று எளவனூரில் உள்ள தங்​களது வயல்​களில் இறங்கி ஒப்​பாரி பாடல்​களைப்​பாடி கும்​மியடித்து தங்​களது துயரத்தை வெளிப்​படுத்​தினர்.

இது​குறித்து அப்​பகுதி விவசாயி கலை​வாணி கூறியது: செப்.1-ம் தேதி மேட்​டூர் அணை​யில் இருந்து தண்​ணீர் திறக்​கப்​பட்​டது. அப்​போதே 45 நாட்​களுக்​குத்​தான் தண்​ணீர் வழங்​கப்​படும் என தெரி​விக்​கப்​பட்​டது. பரு​வ​மழை கைகொடுக்​கும் என்ற நம்​பிக்​கை​யில் சாகுபடியை தொடங்​கினோம். ஆனால், மேட்​டூரில் பாசனத்​துக்​காக திறக்​கப்​பட்ட தண்​ணீர் கடைமடை வரை முழு​மையாக வர​வில்லை.

கர்​நாடகா​விடம் இருந்து உரிய தண்​ணீரை பெற்​றுத்​த​ராமல் அரசு ஏமாற்​றி​விட்​டது. தென்​மேற்கு, வடகிழக்கு பரு​வ​மழையும் போதிய அளவு பெய்​யாததால் குறு​வையைத் தொடர்ந்து சம்பா சாகுபடியும் பொய்த்​து​விட்​டது. வாங்​கிய கடனை எப்​படி திருப்​பிச் செலுத்​து​வது என்ற கவலை​யில் விவசாயிகள் உள்​ளனர். இத​னால், பெண்​கள் ஒப்​பாரிவைத்து தங்​களது துக்​கத்தை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர். இதே நிலை​தான் திரு​வாரூர் மாவட்​டம் முழு​வதும் பரவலாக உள்​ளது. இவ்​வாறு அவர் கூறினார்.

இதேபோல, மன்​னார்​குடி அருகே அரிச்​சத்​திரா ஆற்​றில் தண்​ணீர் வராததால் காரியமங்​கலத்​தில் சம்பா பயிர்​கள் கரு​கி​யுள்​ளன. இதையடுத்து, அங்கு வயலில் அமர்ந்து நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்ட விவசாயிகள், கரு​கிய பயிர்​களுக்கு ஏக்​கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்​பீடு வழங்க வேண்​டும்.

மத்​தி​யக் குழுவை வரவழைத்து பயிர்ச் சேதங்​களை ஆய்வு செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்​டும் என கோரிக்கை விடுத்தனர்.மன்னார்குடி அருகே எளவனூரில் பாமணி ஆற்றில் தண்ணீர் வராததால் தண்ணீரின்றி கருகிப்போன சம்பா சாகுபடி வயலில் நேற்று ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here