நாகர்கோவிலில் கொத்தனாரை தாக்கிய 3 பேர் கைது

0
298

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26), கொத்தனார். இவருக்கும் வடசேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் ஒழுகினசேரி பகுதியில் அய்யப்பன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சந்தோஷ் உள்பட 3 பேரும் சேர்ந்து அய்யப்பனை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் ஆசா ரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சந்தோஷ் உள்பட 3 பேரையும் வடசேரி போலீசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here