2027 ஐசிசி உலகக்கோப்பை: ஜடேஜா, அக்சர் படேல் இடையே கடும் போட்டி

0
18

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 2027 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்பின் பவுலிங் தேர்வில் ஜடேஜாவுக்கும் அக்சர் படேலுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

உலகக்கோப்பைக்கு முன் தென் ஆப்பிரிக்காவுடனான  போட்டிகளில் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு ஜடேஜாவா, அக்சர் படேலா? யார் அதிக பயனுள்ளவராக இருப்பார்கள் என்பது முடிவெடுக்கப்படும் என்று இந்திய ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் சாய் ராஜ் பஹுதுலே தெரிவித்துள்ளார். 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக அக்சர் டி20  அணியுடன் இருக்கும் நிலையில், கடந்த இரண்டு தொடர்களில் இடம்பெறாத ஜடேஜா இந்திய ஒருநாள் அணிக்குத் திரும்பினார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அவர் 10 ஓவர்கள் வீசி 54 ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

கடந்த 12 மாதங்களில், ஜடேஜா ஏழு ஒருநாள் போட்டிகளில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளார்; அவரது பந்துவீச்சு சராசரி 350-க்கும் அதிகமாக உள்ளது. திருவனந்தபுரம் போட்டியைத் தவிர, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய 6 ஒருநாள் போட்டிகளிலும் அவர் தனது முழு  10 ஓவர்களையும் வீசி  நிறைவு செய்யவில்லை. 

மறுபுறம், அக்சர் கடந்த 12 மாதங்களில் விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்; அத்துடன், அந்த காலகட்டத்தில் அவரது பந்துவீச்சு சராசரி (30.87) அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் சராசரியை (32.73) விடச் சிறப்பாகவும் உள்ளது.

ஆனால், “ஜடேஜா எப்பவுமே ஒரு பயன்மிகு வீரர்” என்கிறார் சாய்ராஜ் பஹுதுலே. நிறைய போட்டிகள் வரவிருப்பதால் இந்த இருவரில் யார் அதிக பயனுள்ளவராக களத்தில் செயல்படுவார்கள் என்பதைக் கணித்தே உலகக்கோப்பை அணியில் யார் இடம்பெறுவார்கள் என்பதை முடிவு செய்வோம் என்கிறார் சாய்ஜ்ராஜ்  பஹுதுலே. 

இவர்கள் இருவரையும் சோதித்து உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்வோம் என்று கூறும் சாய்ராஜ் பஹுதுலே “குல்தீப் யாதவ் எப்பவுமே ஒரு மேட்ச் வின்னர்” என்று உலகக்கோப்பை ஒருநாள் அணியில் அவரது இடத்தை ஏறக்குறைய உறுதியே செய்து விட்டார் என்றே கூற வேண்டும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here