Home 2024
Yearly Archives: 2024
சமுதாய வானொலி நிலையங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் ஆயிரமாக அதிகரிக்கப்படும்: மத்திய அமைச்சர் உறுதி
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் ஆகியவை இணைந்து மண்டலசமுதாய வானொலி சம்மேளனம் (தெற்கு) என்ற நிகழ்ச்சியை சென்னையில் நேற்று நடத்தின. இதில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:உள்ளூர் மொழிகளில்... ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் சமுதாய வானொலி நிலையங்களை ஏற்படுத்த வேண்டும் என 2002-ல்திட்டமிடப்பட்டது. 2004-ல் அப்போதைய மத்திய அமைச்சர்எல்.கே.அத்வானி இந்த சமுதாயவானொலி சேவையைத் தொடங்கிவைத்தார். இந்த வானொலி...
கோவாவில் இருந்து அயோத்திக்கு 2000 பக்தர்களுடன் புறப்பட்டது ஆஸ்தா ரயில்
கோவாவிலிருந்து முதல் ஆஸ்தா ரயில் 2000 பக்தர்களுடன் அயோத்திக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் பிரமோத் சாவந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை முன்னிட்டு, இந்திய ரயில்வே நாட்டின் பல நகரங்களில் இருந்து, அயோத்திக்கு 200-க்கும் மேற்பட்ட ஆஸ்தா சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதில் படுக்கை வசதி கொண்ட 20 ரயில் பெட்டிகள் உள்ளன. இந்நிலையில் கோவாவில் இருந்து முதல் ஆஸ்தா ரயில் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கலந்து...
‘ராமாயணம், மகாபாரதம் நிஜமல்ல’ – கர்நாடகாவில் பாடம் நடத்திய ஆசிரியை பணி நீக்கம்
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் செயின்ட் தெரேசா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அருட்சகோதரி பிரபா (32) சமூகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர்கடந்த 8-ம் தேதி 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போது, ராமாயணம், மகாபாரதம் ஆகியவை நிஜமல்ல கற்பனை புராணங்கள் என கூறியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதை பற்றிதகவல் அறிந்த பாஜக, விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், இந்து ஜாகர்ண வேதிகே ஆகியஅமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பிரதமர் மோடி, ராமர் கோயில் பற்றி...
பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு: ஓபிஎஸ் இருக்கை மாற்றம்
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வதுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்து பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.நேற்றைய (பிப்.13) சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை அருகில்தான் துணைத் தலைவர் அமர்வது பேரவையில் மரபாக உள்ளது. துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்படவேண்டும்....
ஸ்ரீபெரும்புதூர் பாலப் பணி விரைவில் தொடங்கும்: சட்டப் பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சட்டப் பேரவையில், கேள்வி நேரத்தின்போது, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ``முதல்வர் வெளிநாடுகளுக்குப் பயணித்து அந்நிய முதலீடுகளைப் பெற்று வருகிறார். இந்த முதலீடுகள் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை நோக்கி வருகின்றன.
தமிழகத்தில் 36 சதவீதம் தொழிற்சாலைகள் உள்ள பகுதி இது. ஆனால், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளது. இதற்கான புதிய திட்டங்கள் உள்ளதா? ஸ்ரீபெரும்புதூர் பாலம் நீண்ட நாட்களாக கட்டப்படாமல் உள்ளது. பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, ``புதிய...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அவசர சிகிச்சை மையம், மலிவு உணவகம் தேவை: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், பல்வேறு குறைபாடுகளை அரசு உடனடியாக சரி செய்ய அக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசின் அவசர சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். கூட்டுறவு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் மலிவு விலை உணவகங்களை உடனடியாக அமைக்க வேண்டும்.
வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்தநாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கநடவடிக்கை...
வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர் சங்கங்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஈட்டிய விடுப்பு சரண்டர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், ஜாக்டோ ஜியோ மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு வெளியிட்டசெய்தியில் கூறியிருப்பதாவது: இந்த அரசு எப்போதுமே அரசுஊழியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறது.கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, பல்வேறு...
தமிழக பாஜக டெல்லி விஜயம்: பிப்.17, 18-ல் தலைமையுடன் ஆலோசனை
மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது. இதன்படி பாமக, தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே சமீபத்தில் கோவை வந்த பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழகத்தில் பாஜக 15 சதவீதத்துக்கு குறையாமல் வாக்குகளை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.அதன்படி சட்டப்பேரவை தொகுதி அளவில் பணிக்குழு, பூத் கமிட்டி, பிரபலங்களை கட்சியில் இணைப்பது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இதுவரை நடந்துள்ள பணிகள்,...
மாதவலாயம் ஊராட்சி பகுதியில் ரேசன் கடை அமைக்க பூமி பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சி பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்கள் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அதற்கான பூமி பூஜை விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், தோவாளை காங்கிரஸ் வட்டார கமிட்டி தலைவர் முருகானந்தம், இந்தியா கூட்டணி கட்சிநிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.",
நாஞ்சில் கல்லூரி மாணவிக்கு பாராட்டு
குமரி மாவட்ட அனைத்து கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் கவிதைப் போட்டியில், நாஞ்சில் கல்லூரி முதுகலை வணிகவியல் துறை மாணவி சி.எல். அகிலா வெற்றி பெற்றாா்.
இம்மாணவியை கல்லூரி செயலா் அருள்தந்தை எக்கா்மென்ஸ் மைக்கேல், கல்லூரி முதல்வா் மி.அமலநாதன், போட்டி
ஒருங்கிணைப்பாளா் ஷீமா மோள் மற்றும் துறை தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.














