Home 2024
Yearly Archives: 2024
டி.கே.சிவகுமாரின் தம்பியை தோற்கடித்த தேவகவுடாவின் மருமகன்: வாக்காளர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட மருத்துவர்
பெங்களூரு ஊரகத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றகர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷை,முதல்முறையாக களம் கண்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் மஞ்சுநாத் (பாஜக) 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் அம்மாநிலஅரசியலில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வருகிறார். அவரது தம்பி டி.கே.சுரேஷ் பெங்களூரு ஊரக தொகுதியில் கடந்த 2013 இடைத்தேர்தல், 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் டி.கே.சுரேஷை...
கருத்து கணிப்பு தவறானதால் கண்ணீர்விட்ட ‘ஆக்சிஸ் மை இந்தியா’ நிறுவனர் பிரதீப் குப்தா
தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தும் ‘ஆக்சிஸ் மை இந்தியா’ முகமையின் தலைவர் பிரதீப் குப்தா நேற்று நடைபெற்ற நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கண்கலங்கி அழுதார்.
முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை நிச்சயம் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது ’ஆக்சிஸ் மை இந்தியா’.
350-400 தொகுதிகள்: இந்நிறுவனம் மட்டுமின்றி இந்ததேர்தல் குறித்து ’இந்தியா டுடே’, ‘ரிபப்ளிக் டிவி’ உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-400 தொகுதிகள் வரை...
கர்நாடகாவில் 3 முன்னாள் முதல்வர்கள் வெற்றி
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை சமாளிக்க, பாஜக கூட்டணியின் சார்பில் களமிறக்கப்பட்ட குமாரசாமி, பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியமூன்று முன்னாள் முதல்வர்களும் அமோகமாக வெற்றி பெற்றுள்ளனர்.
ஹாவேரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் வேட்பாளர் கட்டாதேவர்மத்தை 43ஆயிரத்து 513 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியில் வெற்றிப் பெற்றதன் மூலம், அவர் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ஷிகோன் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாஜக மேலிடம் பெலகாவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தது. அங்கு...
உ.பி. தேர்தல் அலுவலர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “உத்தர பிரதேசத்தின் மகராஜ்கன்ஜ், பன்சி, மீரட், முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களின் தேர்தல் அலுவலர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் இதுபோன்ற ஜனநாயக இடையூறை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 150 மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் மிரட்டுவதாக ஏற்கெனவே ஜெய்ராம் ரமேஷ் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
தேசிய ஜனநாயக கூட்டணியின் 3-வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் அவர் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் 64 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் பெருந்திரளாக வாக்களித்து உலகத்துக்கு உண்மை நிலவரத்தை உணர்த்தி உள்ளனர். இந்த நேரத்தில் மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக...
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண் ணன் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளின் மேல்வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண் ணன் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளின்...
ரயில்வே மின் பாதையில் தொழில்நுட்ப கோளாறு: பரங்கிமலை – பழவந்தாங்கல் இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு
பரங்கிமலை - பழவந்தாங்கல் இடையே ரயில் பாதையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மின்சார ரயில் சேவை நேற்று மாலை ஒன்னே கால் மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பயணம் செய்து வருகின்றனர். அதிலும், காலை, மாலை வேளைகளில் மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், பரங்கிமலை - பழவந்தாங்கல் இடையே ரயில் தடத்தில் உயர்மட்ட...
தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றதாகவும், புகார் எதுவும் வரவில்லை எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று கூறியதாவது: மின்னணு இயந்திரத்தில் கோளாறு இருந்தால் அந்த இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண முயற்சி எடுப்பார்கள். இல்லாவிட்டால் அந்த இயந்திரங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு, அடுத்தடுத்த சுற்று எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும்.
இறுதியில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும்...
குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தி அடுத்த 5 ஆண்டு பாஜக ஆட்சி: அண்ணாமலை உறுதி
அடுத்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி, குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தியதாக அமையும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை ஆதரித்து தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெருமளவில் வாக்களித்த தமிழகமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி.
இம்முறை, நமது மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்குச் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், வரும்காலங்களில் உங்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம்.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி, ஒரு...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் பிரம்மோஸ் நிறுவன முன்னாள் பொறியாளருக்கு ஆயுள் சிறை
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் ரஷ்யாவின் ராணுவ தொழில் கூட்டமைப்பு (என்பிஓ) ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
பிரம்மோஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலுள்ள ஏவுகணை மையத்தில் 4 ஆண்டாக பொறியாளராக பணியாற்றினார் நிஷாந்த் அகர்வால். ஏவுகணை தொழில்நுட்ப ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு (ஐஎஸ்ஐ) வழங்கியதாக நிஷாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கடந்த 2018-ம்ஆண்டு நிஷாந்த் கைது செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அகர்வாலுக்கு...













