Google search engine
Home 2024

Yearly Archives: 2024

தமிழக மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த ஓயாது உழைப்போம்: இபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து

“தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்!” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு முத்தான...

சென்னையில் வடகிழக்கு பருவமழையால் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமையால் மக்கள் பாதிப்பு

வடகிழக்கு பருவமழையால் சென்னையில் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழையால் சென்னையில் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமை போன்றவற்றால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல்நலப் பிரச்சினையால் மருத்துவமனைகளுக்கு வருபவர்களில், 40 சதவீதத்தினருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு இ-கோலி எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், ``எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் இ-கோலி என்பது மனிதர்கள் மற்றும் பாலூட்டி விலங்குகளின் குடலில் வளரும் பாக்டீரியா ஆகும். இதில்...

கண்ணாடி இழை நடைபாலம் முதல் லேசர் ஒளிக்காட்சி வரை – திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பம்சங்கள்!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கடல் நடுவே விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்த சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து...

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை விரிவாக்கம் செய்தார் முதல்வர்

தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் ‘புதுமைப்பெண்’ திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கி பேசியதாவது: காமராஜர் ஆட்சியில் அதிகப்படியான பள்ளிகள் திறக்கப்பட்டன. 1967-ல் அண்ணா நடத்திய அரசியல் புரட்சி, அடுத்து வந்த எல்லாவிதமான மாற்றங்களுக்கும் அடித்தளமாக...

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு 21 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு மாஸ்க் அணிந்து நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 110 மாத அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை கைவிட வேண்டும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு 21 மாதமாக வழங்கப்படாமல் உள்ள...

சென்னையில் பெண்களுக்கான கணினி, தையல் பயிற்சி பள்ளிகள் விரிவுபடுத்தப்படும்: மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி சார்பில், பெண்களுக்கான கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டம் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்...

உயர் நீதி​மன்ற நிர்வாக பிரிவுக்கு 11 மாடிகளுடன் புதிய  கட்டிடம்: உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் திறந்து வைத்​தனர்

உயர் நீதி​மன்ற வளாகத்​தில் நிர்வாக பிரிவுக்கென 11 மாடிகள் கொண்ட புதிய அடுக்​கு​மாடி கட்டிடத்தை உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் நேற்று திறந்து வைத்​தனர். பாரம்​பரிய கட்டிடத்​தில் இயங்கி வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதி​மன்ற அறைகளுக்கு இணையாக நிர்​வாகப் பிரிவுடன் கூடிய பல்வேறு அலுவலகப் பிரி​வும் தனித்தனி அறைகளில் இயங்கி வந்தன. இதனால் ஏற்பட்ட இடநெருக்​கடியை கருத்​தில்​கொண்டு நிர்​வாகப் பிரிவுக்கென புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்​யப்​பட்​டது. அதன்படி, எஸ்பிளனேடு நுழைவுவா​யில் பகுதி​யில் 11 அடுக்​கு​மாடிகளுடன் கட்டப்​பட்ட புதிய நிர்​வாகப் பிரிவு கட்டிடத்தை உச்ச...

கொலை மிரட்டல்: எஸ்.வி. சேகர் புகார்

தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணனிடம் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று புகார் மனு அளித்​தார். பின்னர் செய்தி​யாளர்​களிடம் அவர் கூறுகையில், ‘‘தமிழக பாஜக தலைவர் அண்ணா​மலை, சவுக்​கால் அடித்​துக் கொண்டது தொடர்பாக என் கருத்தை சமூக வலைதளங்​களில் பேசினேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து நிறைய செல்போன் அழைப்புகள் வருகிறது. கொலை மிரட்டல் விடுத்​தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளேன்’’ என்றார்.

நாகர்கோவில்: சிவன் கோவில் மார்கழி மாத பஜனை நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காடு அருள்மிகு சிவன் கோவிலில் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமையான இன்று (டிச. 29) காலை சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மார்கழி மாத பஜனை நடைபெற்றது. இதில் பஜனை குழுவினர் கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் பஜனை பாடிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. நியமனம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த சுந்தரவதனம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த ஸ்டாலின் தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2025 ஆம் ஆண்டு 1 ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் வாக்கு என்னும் மையத்தில் தீவிர ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் கோணம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....

குமரி: கோவிலில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள நாராயணசாமி கோவிலில் நேற்று மாலை பணி விடை செய்ய சென்ற பூசாரி செல்வகுமார், கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். சாமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலி,...

பத்மநாபபுரம்: தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் அழகுமீனா நேற்று ஆய்வு செய்தார். திருவட்டாறு அரசு தொடக்கப்பள்ளி, வேர்கிளம்பி முதலார் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட அவர், வாக்குச்சாவடி வளாகங்கள்...