Google search engine
Home 2024

Yearly Archives: 2024

அழகர்கோவில், மருதமலையில் நாள்​ முழுவதும் அன்னதானம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அழகர்​கோ​யில், மருதமலை கோயில்​களில் நாள் முழு​வதும் அன்ன​தானம் வழங்​கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கோயில்​களில் நாள் முழுவதும் அன்ன​தானம் வழங்​கும் திட்​ட​மானது ஸ்ரீரங்​கம் - ரங்கநாத சுவாமி கோயில், பழனி - தண்டா​யுத​பாணி சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்​களில் செயல்​படுத்​தப்​பட்டு வந்தது.இந்நிலை​யில், இந்த அரசு பொறுப்​பேற்​றபின், கடந்த 2021-ம் ஆண்டு திருச்​செந்​தூர் - சுப்​பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் - மாரி​யம்மன் கோயில், திருத்தணி - சுப்​பிரமணிய சுவாமி கோயில்​களி​லும்,...

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

வட தமிழக கரையை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்தது. பின்னர் அந்த...

அண்ணா பல்கலை. பாலியல் கொடுமை: சென்னையில் அதிமுக, பாஜக ஆர்ப்பாட்டம்; 1,500 பேர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன், போலீஸிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, கை காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக, பாஜக கட்சியினர் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வரும் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு 7.45 மணி அளவில் அதே கல்லூரியில் படிக்கும் நெருங்கிய...

நல்லகண்ணு பல்லாண்டு வாழ்ந்து வழிநடத்த வேண்டும்: பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, பல்லாண்டு வாழ்ந்து, இளைஞர்களை வழிநடத்தி, அவர்களோடு துணை நிற்க வேண்டும் என்று, அவரது பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, நல்லகண்ணுவுக்கு பொன்னாடை போர்த்தி, நூல்கள் வழங்கி கவுரவித்தார். விழாவில் முதல்வர் பேசியதாவது: இந்திய...

அம்மா உணவகங்களை ரூ.21 கோடியில் புனரமைக்கும் பணிகள்: சென்னை மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை

சென்னை மாநகராட்சி சார்பில் அம்மா உணவகங்களை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2013 முதல் 2016 காலகட்டத்தில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. தற்போது 388 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒரு இட்லி ரூ.1-க்கும் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட கலவை சாதம் ரூ.5-க்கும் 2 சப்பாத்தி ரூ.3-க்கும் விற்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் இது நாள்வரை குறிப்பிடும்படியாக பராமரிப்பு செய்யாமல்...

தலைவர் நியமிக்கப்படாததால் மாநில குழந்தைகள் ஆணையம் செயல்படாமல் முடங்கி உள்ளது: கே.பாலகிருஷ்ணன்

தலைவர் நியமிக்கப்படாததால் மாநில குழந்தைகள் ஆணையம் முடங்கி உள்ளதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. 2023-ம் ஆண்டு 1,054 குழந்தை திருமணங்களும், 2024-ம் 1,640 குழந்தை திருமணங்களும் நடைபெற்றுள்ளதாக ஆர்டிஐ தெரிவிக்கிறது. குறிப்பாக ஈரோடு, திருநெல்வேலி, பெரம்பலூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருவது கடும்...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் காலத்தில் பெறப்பட்ட 23.09 லட்சம் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், வரும் ஜன.6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம், அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை அறிவித்தது. அதன்படி, கடந்த ஆக.20 முதல் அக்.18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல்,...

தமிழகத்தில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத்துறை

தமிழகத்தில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் வரை 11,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன. இதில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்திற்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில், முதல் தவணைக்கு பின், அடுத்த தவணையை சில...

‘ஈடு இணையற்ற பொருளாதார மேதை’ – மன்மோகன் சிங் மறைவுக்கு வைகோ இரங்கல்

“ஈடு இணையற்ற பொருளாதார மேதையும், ஜனநாயகக் காவலருமான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அளவற்ற அதிர்ச்சியும், ஆரா துயரமும் கொண்டேன். இமாலயப் பொறுமைக்கு இலக்கணம் வகுத்தவரும், எளிமையானவரும், உலக நாட்டுத் தலைவர்களிடையே மதிப்பையும் பெற்றிருந்த மாமனிதர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஈடு இணையற்ற பொருளாதார மேதையும், ஜனநாயகக் காவலருமான...

கோட்டார்: லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நேற்று ரோந்து சுற்றி வந்த போது அனுப் மோன், பூமா, மற்றும் பகவதி ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது சப் இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், ஒரு செல்போன், ரூ. 1500 பணம் ஆகியவைகளை பறிமுதல் செய்தார்.

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான்

தடிக்காரன்கோணம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நேற்று ஒரு மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அழகு மீனா இந்த ஓட்டத்தை தடிக்காரக்கோணத்தில் துவக்கி வைத்தார். பூதப்பாண்டி வட்டார...

தேங்காப்பட்டணம்: வாலிபரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட புதுக்கடை போலீசார், அரசால் தடை செய்யப்பட்ட 10 கிராம் கஞ்சாவுடன் ஜாண் டேனியல் (34) என்ற வாலிபரை கைது செய்தனர். வேங்கோடு...

புதுக்கடை: கிராம அலுவலக உதவியாளர், மனைவி மீது தாக்குதல்

முளகுமூடு கிராம அலுவலக உதவியாளர் மரியபிரபாகரன் (35) மற்றும் அவரது மனைவி மேரி பெல்சி ஆகியோர், பக்கத்து வீட்டுக்காரர் ஆண்டனி (53) மற்றும் அவரது கூட்டாளிகள் சுபாஷ் (27), ஜியோ (20) ஆகியோரால்...