Home 2024
Yearly Archives: 2024
வன்கொடுமையை கண்டித்து போராட்டம்: அதிமுக, பாஜகவினர் 1500 பேர் மீது வழக்கு
மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவை சேர்ந்த 1,500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து பல்கலைக்கழகத்துக்கு எதிரே அதிமுகவினர் கடந்த 26-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீரென சாலை தடுப்பின் மீது ஏறி, தமிழக அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட...
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிப்பு
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு நாள்தோறும் பூஜையும், அன்னதானமும் செய்யப்படுகிறது. இந்நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படவுள்ளது.
இதற்கான குருபூஜையில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முதல் தவெக...
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு அனுமதிக்க வணிகர்கள் வலியுறுத்தல்
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் அசோசியேஷன் தலைவர் ஜி.சங்கரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019 முதல் தடை விதிக்கப்பட்டது. அத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் பெரும்பாலும் குறு நிறுவனங்களாக உள்ளன. லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய இத்தொழில் முடங்கியுள்ளது.
இந்நிலையில் உற்பத்தி, வைத்திருத்தல், விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்ட 14...
வேளச்சேரி – பரங்கிமலை இடையே 2025 மார்ச்சில் ரயில் சேவை தொடங்க திட்டம்
‘வேளச்சேரி-பரங்கிமலை இடையே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவை தொடங்கப்படும்’ என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கடந்த 1985-ம் ஆண்டு பறக்கும் ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, முதற்கட்டமாக 1997-ம் ஆண்டு சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே 9 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.266 கோடியில் ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. 2-ம் கட்டமாக மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே ரூ.877 கோடி செலவில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 3-ம் கட்டமாக 2008-ம்...
அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர் மன்மோகன் சிங்: ஆளுநர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் மன்மோகன் சிங் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: பணிவு மற்றும் நேர்மையின் உருவமாக விளங்கியவர் மன்மோகன் சிங். இந்தியா பொருளாதாரத்தின் சவாலான காலகட்டத்தில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியவர். அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
துணை முதல்வர் உதயநிதி: இந்திய பொருளாதாரத்தை மன்மோகன் சிங்கின் காலகட்டத்துக்கு முன் - பின் என குறிப்பிடும்படியாக மாற்றியமைத்தவர். அவரது மறைவு நாட்டுக்கே பேரிழப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மன்மோகன் சிங்கின் நிதிக் கொள்கைகள் தான் நம் நாட்டின் பொருளாதாரத்தை...
நெமிலி அருகே விபத்தில் உயிரிழந்த ஹவில்தார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த ஹவில்தார் குடும்பத்துக்கு முதல்வர் மு. க.ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நேற்று அறிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (34).
இவர், சென்னை தலைமை செயலகத்தில் உள்வட்ட பாதுகாப்பு வாகன பிரிவு அணியில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புஷ்மிதா (27). தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளன. செந்தில்வேல் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனத்தை விட்டு...
விஜய் விரைவில் சுற்றுப்பயணம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அவர் தனது சுற்றுப்பயணத்தை ஜனவரி 27-ம் தேதி தொடங்க இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாலியல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஞானசேகரன் என்பவர் அத்துமீறி நுழைந்து, மாணவர் ஒருவரை அடித்து உதைத்துவிட்டு உடன் இருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதை செல்போனிலும் படம் எடுத்துள்ளார்.
அப்போது அவர் செல்போனுக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் ஒருவரிடம் சார் சார் என்று பேசியதாகவும் அந்த மாணவர் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த சார் யார்...
மாணவி பாலியல் துன்புறுத்தல்: பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு புகார் வரவில்லை – அமைச்சர் கோவி.செழியன்
அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி நடந்த அசம்பாவித சம்பவம் தொடர்பாக 25-ம் தேதி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. புகார் மனு பெற்ற குறுகிய காலத்திலேயே அந்த நபர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக போஷ் கமிட்டிக்கு (பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழு) புகார் வரவில்லை. அதேநேரத்தில் காவல்துறையில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறை விசாரணைக்கு...
தமிழகத்தில் ஜன.2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வட தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால்: தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது....














