குமரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு கிராமப் பகுதியிலும் ஊர்காவல் கண்காணிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டு பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி குமரி மாவட்டத்தில் கடந்த முதல் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை 15 நாட்களில் 19 பேர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.














