அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி நியூயார்க் கில் இன்று தொடங்கவுள்ளது. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனும், செர்பிய வீரருமான நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷ்ய வீரர்கள் டேனியல் மேத்வதேவ், ஆந்த்ரே ரூபலேவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்துகொண்டு விளையாடவுள்ளனர்.இதேபோல் மகளிர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், பெலாரஸின் அரினா சபலென்கா, கஜகிஸ்தானின் எலீனா ரைபகினா, அமெரிக்காவின் கோகோ கவுப் உள்ளிட்டோர் களமிறங்கவுள்ளனர்.