கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மற்றும் ஈஷா யோகா மையம் இணைந்து உலக மனநல தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு தியான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் நாகராஜன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ஐயப்பன் வாழ்த்துரை வழங்கினார். ஈஷா ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.