தமிழகத்தில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் தேமுதிக என்று நம் உழைப்பால் உணர்த்துவோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
21-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எழுதிய கடிதம்: சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாக ‘ஒரே குலம் ஒரே இனம்’ என்ற கோட்பாட்டோடு சனாதனம், சமதர்மம், சமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியாக தேமுதிக என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் மிகப்பெரிய சவாலாகும். இத்தேர்தலிலும் நாம் மகத்தான வெற்றி பெற அனைவரும் ஒன்றாக உழைப்போம். ஜன.9-ல் கடலூரில் நடைபெற உள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வெற்றியடையச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை.
தேமுதிக இன்று தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தி என்றும், தமிழ்நாட்டில் யாரும் தவிர்க்க முடியாத இயக்கம் என்றும், நம் உழைப்பால் உணர்த்துவோம். ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற தலைவரின் தாரக மந்திரப்படி எட்டுத்திக்கும் நமது முரசு வெற்றி முரசாகக் கொட்ட அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம், வெற்றி பெறுவோம்.