Home உலக செய்திகள் “பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” – இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

“பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” – இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

0

இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அப்போது இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பு குறித்து தெரிவித்தார்.

“கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு இந்திய மக்களின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிக்கிறேன். உங்கள் வலியை நாங்கள் அறிவோம். உங்கள் துக்கத்தை பகிர்கிறோம். இந்த தருணத்தில் இஸ்ரேலுடன் இந்தியா நிற்கிறது.

மக்களின் உயிர் பலியை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. இந்தியாவும் நெடுங்காலமாக பயங்கரவாதத்தின் வலியை தாங்கி நிற்கிறது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் எங்கள் நினைவில் வடுவாக உள்ளது. உங்களைப் போலவே பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை மற்றும் சமரசமற்ற கொள்கையை நாங்கள் கொண்டுள்ளோம். இதில் மாற்றுக்கருத்து இல்லை.

அந்த வகையில் நீடித்த அமைதியை அடைய, பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது.

இந்தியா உலக அளவில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த 2006-ல் குஜராத் முதல்வராக இங்கு வந்தேன். பின்னர் 2017-ல் பிரதமராக இஸ்ரேல் வந்தேன். அதன் பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான ஈடுபாடு அதிகரித்தது. வர்த்தகம், முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி சார்ந்த பணிகளில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு முன்னதாக பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “உலக அளவில் பிரதமர் மோடி சிறந்த தலைவர்” என புகழாரம் சூட்டினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version