Home உலக செய்திகள் ரூ.98 கோடி தங்கப் புதையல் – கழிவுநீர் குழாய் மாற்ற பள்ளம் தோண்டியபோது கண்டெடுப்பு

ரூ.98 கோடி தங்கப் புதையல் – கழிவுநீர் குழாய் மாற்ற பள்ளம் தோண்டியபோது கண்டெடுப்பு

0

பெல்​ஜி​யத்​தில் கழிவுநீர் குழாய் அமைக்​கும் பணியின்​போது, கட்​டு​மானத் தொழிலா​ளர்​கள், தங்கக் கட்டிகள் மற்​றும் அரிய தங்க நாண​யங்​கள் அடங்​கிய மிகப்​பெரிய புதையலை கண்​டெடுத்​துள்​ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.98 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

பெல்​ஜி​யம் தலைநகர் பிரஸ்​ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே சுமார் 30 கி.மீ. தொலை​வில் உள்ள சின்ட்​-கில்​லிஸ்​-டெண்​டர்​மொன்டே பகுதி​யில், மது​பான உற்​பத்தி ஆலை கடந்த 1899 முதல் 1970 வரை செயல்​பட்டு வந்​தது. தற்​போது, அந்​தப் பழமை​யான கட்​டிடம் முழு​மை​யாகப் புதுப்​பிக்​கப்​பட்டு வரு​கிறது. ‘சிஏடபிள்யூ ஊஸ்ட் லான்டரன்’ என்ற சமூக நல அமைப்பு சார்​பில், அங்கு புதிய அலு​வல​கங்​கள் மற்​றும் குடி​யிருப்​பு​களை உரு​வாக்​கும் பணி மேற்கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், அங்கு பழைய கழி​வுநீர் குழாய்​களை மாற்றுவதற்காக பூமி​யில் பள்​ளம் தோண்​டிய போது, தங்கப் புதையல் கண்​டுடெடுக்​கப்​பட்​டுள்​ளது. 18 வயதான கோபெ என்ற பணி​யாளர் இந்​தப் புதையலைக் கண்​டு​பிடித்​தார். இதுகுறித்​து, அவர் கூறுகை​யில், “கழி​வுநீர் குழாய்​களை மாற்​று​வதற்​காக பள்ளம் தோண்​டிய போது, திடீரென அங்கு ஏதோ கிடப்​ப​தைப் பார்த்​தோம். முதலில் அவை யூரோ நாண​யங்​கள் என்று நினைத்தேன். பின்​னர், அது தங்​கக் கட்​டிகள் என தெரிய வந்​தது” என்​றார்.

தங்க நாண​யங்​கள், தங்​கக் கட்​டிகள் மற்​றும் எண்​கள் பொறிக்கப்பட்ட தங்​கப் பட்​டைகள் உள்​ளிட்ட இந்​தப் புதையலின் மதிப்​பு, சுமார் ரூ.98 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. கடந்த 9-ம் நூற்​றாண்​டின் பிற்​பகு​தி​யில் மது​பான ஆலை உரிமை​யாளர் தியோபிலஸ் வான் அஸ்ஷே என்​பவருக்​காகக் கட்​டப்​பட்ட பிரம்மாண்ட மாளி​கை​யின் அடித்​தளச் சுவருக்​குள் ஒரு பையில் இந்​தப் புதையல் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டிருந்​தது.

புதையல் கண்​டு​பிடிக்​கப்​பட்​டதும் அதி​காரி​கள் அந்​தப் பகு​தி​யைப் பாது​காப்​புப் பகு​தி​யாக அறி​வித்​து, தங்​கப் பொருட்​களை பிரஸ்​ஸல்​ஸில் உள்ள பாது​காப்​பான இடத்​துக்கு கொண்டு சென்றனர். தற்​போது, அவை யாருக்​குச் சொந்​த​மானவை என்​ப​தைத் தீர்மானிக்க விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

கிழக்கு ஃபிளாண்​டர்ஸ் அரசு வழக்​கறிஞர் அலு​வல​கத்​தைச் சேர்ந்த ஹன்னே ஒலி​வியர் கூறுகை​யில், முதலில் அந்​தத் தங்​கம் திருடப்​பட்​டதா அல்​லது ஏதேனும் குற்​றச் செயலுடன் தொடர்​புடையதா என்​பதை அதி​காரி​கள் உறுதி செய்ய வேண்​டும் என்று தெரி​வித்​தார்.

இந்​தப் புதையலுக்கு கட்​டு​மானப் பணியை மேற்​கொண்ட நிறு​வனங்​கள், சமூக நல அமைப்பு மற்​றும் தியோபிலஸ் வான் அஸ்ஷே குடும்​பத்​தின் வாரிசுகள் உள்​ளிட்​டோர் உரிமை கோரக்கூடும். பெல்​ஜி​யம் நாட்டு சட்​டப்​படி, புதையலைக் கண்​டு​பிடித்​தவர்​கள் அதன் உண்​மை​யான உரிமை​யாளர்​கள் உரிமை​கோர முன்​வரு​வதற்கு குறைந்​தது ஐந்து ஆண்​டு​கள்​ காத்​திருக்​க வேண்டும்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version